ஹைக்கூ கவிதைகள்

Sunday 10 June 2012

சிந்தியுங்கள் சிகரத்தை எட்டும்வரை

திரு. ஏ.எஸ். சந்துரு அவர்கள் எழுதியுள்ள இந்த நூல் முயற்சி திருவினையாக்கும் என்பதை பல கோணங்களிலிருந்து விளக்குகிறது.

பிரபஞ்சத்தின் ஆச்சர்யங்கள் பற்றியும் இயற்கையின் செயல்பாடுகள் பற்றியும் அவர் விளக்குகிறார். அவர் கூறுகிறார்,

"பகலில் சூரியனைச் சுற்றியுள்ள கோள்களின் இயக்கம் பூமியைப் பாதிக்காத வண்ணம் சீராக வடிவமைக்கப்பட்டுள்ளது. கண்ணுக்குப் புலப்படாத கதிர்கள் நம்மைப் பலவாறு பாதுகாத்துக் கொண்டிருக்கின்றன."

ஜாதகம், எண் கணிதம் ஆகியவற்றில் நம்பிக்கை உள்ளவர் கூட அவற்றை அப்படியே எடுத்துக்கொள்ளாமல் யதார்த்த நிலைகளின் அடிப்படையில் செயல்பட வேண்டும் என்று கூறும் அவர் அதற்கு ஒரு உதாரணத்தை தந்து விளக்குகிறார். ஒரு குழந்தை பிறந்த நேரம் சரியில்லாத்தால் துன்பங்கள் வருகின்றன என்று அதைத் திட்டித் துன்புறுத்தினால் அது கெட்டுப்போக பெற்றோர்களே காரணமாகிவிடுவர் என்றும் கஷ்ட நஷ்டங்களுக்கான காரணங்களை அலசி ஆராய்ந்து செயல்பட வேண்டும் என்று எடுத்துக்கூறுகிறார். சுய நம்பிக்கை, விடாமுயற்சி, பொறுமை விவாதங்கள் மூலம் ஆசிரியர் விளக்குகிறார்.

அவரது இந்த ஆலோசனைகள் வாழ்க்கையை முன்னேற்ற உதவும். குறிப்பாக இளைஞர்கள் சுய நம்பிக்கையுடனும் உறுதியுடனும் செயல்பட இந்த  நூல் ஊக்குவிக்கும் என்பதில் சந்தேகமில்லை..

0 comments:

Post a Comment