ஹைக்கூ கவிதைகள்

Saturday 5 May 2012

நம்பி(க்)கை வை

இவர்தான் நமது தந்தை என்று பெயருக்கு முன் போட்டுக்கொள்ளும் எழுத்தை உறுதிசெய்ய யாரும் மரபணுப் பரிசோதனை செய்துகொள்வதில்லை. அந்த எழுத்தை விசுவாசமாக நம்பித்தான் நம்மை யார் என்று அடையாளம் காட்டிக்கொள்கிறோம். அதைப்போல் நம் வாழ்க்கை நல்லதாக அமையும் என்ற நம்பிக்கையை முன்வைத்து மனம் தளராமல் தொடர் ஓட்டம் ஓடினால் வெற்றி நிச்சயம்.

எழுத்தாளர் நாமக்கல் A.S. சந்துரு அவர்கள் 'நம்பிக்கை வை' என்னும் இந்நூலில் நம்பிக்கைகொள்ளும் வழிமுறைகளைக் கூறுகிறார்.

நாம் சந்தித்த தோல்விகளை நாம் கற்றுக்கொண்ட பாடங்களாகக் கொண்டு வெற்றிப்படிகளை அமைத்துக்கொண்டால் உலகம் நம்மைப் போற்றும். தயக்கம் என்ற எதிரி நமக்குத் தடைக்கற்களாக இருக்கும். முன் யோசனையும் துணிச்சலும் முன்னேற்றம் தரும்.

கண் இமைக்கும் நேரத்தில் வெளிப்படும் மின்னல் எவ்வளவோ மின்சக்தியை வெளியிடுகிறது. அதைப்போல் நமக்குள் ஒளிந்திருக்கும் சக்தியை நாம் வெளிப்படுத்தினால் வெற்றி நிச்சயம்.

தெரியாத விஷயங்களைத் தெரிந்துகொள்ளும் விழிப்புணர்ச்சி இருந்தால் நாடு வளர்ச்சி பெறும். நாமும் வளர்ச்சி பெறுவோம். பிறரிடம் உள்ள திறமை கண்டு பொறாமை கொள்ளாமல் நம்மிடம் உள்ள திறமையை வளர்த்துப் பெருமை சேர்க்கவேண்டும்.


மனித நேயமும் சேவையும் மனிதனை உயர்ந்தவனாக்கும். நடந்தவற்றை எண்ணி எண்ணிக் கவலை கொள்ளாமல், ஒரு வினாடியைக் கூட வீண்டிக்காமல் உழைத்தால் வெற்றி உறுதி என்கிறார் ஆசிரியர்.
நமது லட்சியத்திற்காக நம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடனும் உழைத்துக்கொண்டும் காத்துக்கொண்டும் இருந்தால் பேரும் புகழும் நிலைக்கு நிற்கும். தன்னம்பிக்கை நிரம்ப்ப பெற்றவர். தோல்விகளைச் சந்திப்பதில் சஞ்சலப்படமாட்டார். தன்னம்பிக்கையற்றவர்கள் தோல்வியைக் கண்டு மனம் உடைந்து விரக்தியடந்துவிடுவார்கள்.

நல்ல புத்தகங்கள் வாங்கச் செலவுசெய்யும் பணம் வட்டியுடன் திரும்பக் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் பயன்படுத்தினால் வளம் நிறையும்.

ஐந்தறிவு உயிரினங்களுக்குப் போராட்டம் இயல்பாகவே உள்ளது. ஆனால் நாம் சின்னச்சின்ன தோல்விகளை வென்று சாதனை படைக்கப் போராடுவதில்லை. நாம் சாதிப்பதற்காகவே படைக்கப்பட்டவர்கள் என்று நம்பிக்ச் செயல்பட்டால் வெற்றி நம்மை வந்தடைவது உறுதி.

சிலகாலம் நடமாடி மறைந்துபோகும். மனிதன் புகழ வேண்டும் என்று கருதாமல் காலம் நம்மைப்போற்ற வேண்டும் என்று கருதிப் பெரிய காரியங்களில் ஈடுபடவேண்டும். நம்மைச் சார்ந்திருப்பவர்களை மகிழ்ந்திருக்கச் செய்வதே வாழ்க்கையின் மகத்துவம்.

அதிர்ஷ்டம் என்பது தூரத்தில் தெரிவது. அயராத உழைப்பு என்பது நம் கையில் இருப்பது. எங்கோ இருப்பதை நம்பாமல் கையில் இருப்பதை நம்பிச் செயலாற்ற வேண்டும். தாழ்வு மனப்பான்மை தோல்வி என்ற பள்ளத்தில் தள்ளிவிடும். வெற்றி, தோல்வி, திறமையால் நிர்ணயிக்கப்படுவதல்ல. மன உறுதியாலும் அணுகுமுறையாலும் நிர்ணயிக்கப்படுகிறது.

சாதி, மத, இன உணர்வுக்கு அடிமையாகாமல் உண்மையான அன்பு வழியில் பொறுப்புணர்வுடன் நடந்தால் முன்னேற்றம் உறுதி. நல்ல சிந்தனையும் நம்பிக்கையும் இந்த உலகை நாகரிக சொர்க்கமாக மாற்றும்.

தெரியாத விஷயங்களைத் தெரிந்துகொள்ளும் விழிப்புணர்ச்சி இருந்தால் நாடுவளர்ச்சி பெறும். நாமும் வளர்ச்சி பெறுவோம். பிறரிடம் உள்ள திறமை கண்டு பொறாமை கொள்ளாமல் நம்மிடம் உள்ள திறமையை வளர்த்துப் பெருமை சேர்க்க வேண்டும்.

மனித நேயமும், சேவையும் மனிதனை உயர்ந்தவனாக்கும், நடந்தவற்றை எண்ணி எண்ணிக் கவலை கொள்ளாமல் ஒரு வினாடியைக் கூட வீணாக்காமல் உழைத்தால் வெற்றி உறுதி.

மேற்கூறிய வாழும் வழிமுறைகளை உள்ளடக்கிய இந்நூலை ஒவ்வொருவரும் படித்து உணர்ந்து, உயர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்நூலை எழுதியிருக்கிறார் நூலாசிரியர் நாமக்கல் ஏ.எஸ் சந்துரு அவர்களே..

இந்நூல் நியூசெஞ்சுரி பதிக்கத்தாரின் இணை பதிப்பகமான தாமரைப் பதிப்பகத்தின் வெளியீடு.

0 comments:

Post a Comment